திங்கள்கிழமை 19 நவம்பர் 2018

சீரான குடிநீர் கோரி ஆட்சியரிடம்  கிராம மக்கள் முறையீடு

DIN | Published: 11th September 2018 08:44 AM

குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி குறைதீர் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் த.அன்பழகன் தலைமை வகித்தார். சணப்பிரட்டி மக்கள் அளித்த மனு: கரூர் நகராட்சிக்குள்பட்ட சணப்பிரட்டியில் 1,000க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நகராட்சி மூலம் கட்டளை காவிரி ஆற்றில் இருந்து காவிரி நீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அண்மையில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குடிநீரேற்றும் நிலையத்தில் குடிநீர் குழாய்கள் பழுதடைந்ததால் குடிநீர் விநியோகம் தடைபட்டது. 
இதையடுத்து பழுதான ஜெனரேட்டர், குழாய்களை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் சென்றவாரம் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. குடிநீரேற்று நிலையத்தை பார்வையிட்டு  தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல, மூக்கணாங்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட சின்னம்ம நாயக்கன்பட்டி, கடவூர் வீரியப்பட்டி கிராம மக்கள், சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  மனு அளித்தனர்.
 

More from the section

அமராவதியில் திடீர் வெள்ளம்; வீணாகும் நீரைச் சேமிக்க தடுப்பணை தேவை: விவசாயிகள் கோரிக்கை
உழைப்பின் களைப்பு போக்கும் அருமருந்தே நாட்டுப்புறப் பாட்டு
பணியில் இருந்த அஞ்சல் ஊழியர் மயங்கி விழுந்து சாவு
3 புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம்
இளைஞருக்கு கத்திக்குத்து: ரயில்வே ஊழியர் உள்ளிட்ட இருவர் மீது வழக்குப் பதிவு