திங்கள்கிழமை 24 செப்டம்பர் 2018

மொபட் மீது கார் மோதல்: முதியவர் சாவு

DIN | Published: 11th September 2018 08:45 AM

வேலாயுதம்பாளையம் அருகே மொபட் மீது கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், கீழ்ஒரத்தை பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி(75). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு மொபட்டில் கரூர்- சேலம் புறவழிச்சாலையில் சாலையில் அய்யம்பாளையம் பிரிவு பகுதியில் சென்றார். அப்போது  எதிரே வந்த கார், மொபட் மீது மோதியதில் பலத்த காயமடைந்த முத்துசாமி நிகழ்விடத்தில் இறந்தார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய கார் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

More from the section

வெங்கடரமண சுவாமி கோயிலில் புரட்டாசி முதல் சனி சிறப்பு வழிபாடு
உலக அமைதி தின உறுதிமொழியேற்பு
வெண்ணைமலை முருகன் கோயிலில் கிரிவலப் பாதை அமைக்க அமைச்சர் ஆய்வு
இன்று வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம்
சுவரில் மோதி இறந்த மயிலை மீட்டு வனத்துறையினர் அடக்கம்