வியாழக்கிழமை 20 செப்டம்பர் 2018

அதிமுகவினருக்கு தேர்தல் பணி கையேடு

DIN | Published: 12th September 2018 07:44 AM

கரூர் வெங்கமேட்டில் செவ்வாய்க்கிழமை பூத் கமிட்டியின் தேர்தல் பணி கையேட்டை கட்சி நிர்வாகளிடம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரூர் மாவட்ட அதிமுக சார்பில் வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களை சந்திக்கும் வகையில் பூத் கமிட்டியின் செயல்பாடுகள் குறித்த தேர்தல் பணி கையேடு கட்சி நிர்வாகிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை வெங்கமேட்டில் 10-வது வார்டில் நடைபெற்றது. 
அதிமுக மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமை வகித்து, பூத் கமிட்டி தேர்தல் பணி கையேடுகளை நிர்வாகிகளிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் கரூர் ஒன்றியக் குழுத் தலைவர் எஸ். திருவிகா, முன்னாள் நகர்மன்றத் தலைவர் தமிழ்நாடு செல்வராஜ், நகரச் செயலர் வை. நெடுஞ்செழியன், முன்னாள் மாவட்ட பொருளாளர் பேங்க் நடராஜன், நகர பாசறை செயலர் செல்வகுமார் உள்ளிட்ட கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.

More from the section

காவிரி படுகையில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் கள ஆய்வு
கூட்டணிக்காக நாங்கள் யார் கதவையும் தட்டவில்லை
செப். 25 -இல் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூரில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னையில் ஜன.21-இல் அசுவமேத யாகம் : செ.நல்லசாமி