செவ்வாய்க்கிழமை 25 செப்டம்பர் 2018

இமானுவேல் சேகரன் படத்திற்கு மாலை

DIN | Published: 12th September 2018 07:41 AM

பரமக்குடி இமானுவேல் சேகரனின் குருபூஜையை முன்னிட்டு புதிய தமிழகம் கட்சி சார்பில் அவரது படத்துக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
பேருந்து நிலைய ரவுண்டானா அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலர் அசோகன் தலைமை வகித்து இமானுவேல் சேகரன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தாந்தோணி கிழக்கு ஒன்றியச் செயலர் ராமச்சந்திரன், மேற்கு ஒன்றியச் செயலர் முத்துக்குமார், நகரச் செயலர் பூபதி, ஒன்றிய இளைஞரணி செயலர் ஆர். மணிகண்டன், மாவட்ட செய்தித்தொடர்பாளர் சுபாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் காரில் பரமக்குடி புறப்பட்டுச்சென்றனர்.
 

More from the section

செல்பேசி திருடியதாக 15 வயது சிறுவன் அடித்துக் கொலை: 5 பேர் மீது வழக்கு


தொழில் தொடங்க பணம் தராததால் தந்தையை எரித்துக்கொன்ற மகன்

உடல்பருமன் அறுவை சிகிச்சை விழிப்புணர்வு
பைக் மீது லாரி மோதல்: தொழிலாளி சாவு
"வாழ்க்கையை சுவைக்கப் பழக வேண்டும்'