இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கரூரில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கரூரில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் ஜெ.ஜெயராஜ் தலைமை வகித்தார். அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்க மாவட்டச் செயலாளர் பெ.நித்தியானந்தன் வரவேற்றார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் காளிமுத்து உள்ளிட்டோர் ஆர்ப்பாட்ட விளக்க உரையாற்றினர். தமிழ்நாடு பதவிஉயர்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலப் பொருளாளர் ப. தமிழ்வாணன், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் கோ.இளங்கோ, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் ஆ. மலைக்கொழுந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
வேலூர் மாவட்டம் பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஆசிரியர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com