தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம்

கரூர் மாவட்ட தனியார் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சிறப்பு ஆலோசனைக்

கரூர் மாவட்ட தனியார் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சிறப்பு ஆலோசனைக் கூட்டம் வெண்ணைமலை சேரன் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
          கரூர் மாவட்ட மெட்ரிக். பள்ளி முதல்வர்கள் சங்கச் தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  கொங்கு மண்டல சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்கள் சங்கத் தலைவரும், மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சக தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினருமான ராமசுப்ரமணியன்,  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பள்ளி மாணவர்களுக்காக எழுதிய "பரீட்சைக்கு பயமேன்' புத்தகத்தை தனியார் பள்ளி தலைமையாசிரியர் சங்க அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கி புத்தக அறிமுக உரையாற்றினார்.  
இந்தப் புத்தகங்களை கரூர் மாவட்ட மெட்ரிக். பள்ளி முதல்வர்கள் சங்க தலைவர் சாகுல் ஹமீது, செயலர் தேசிய நல்லாசிரியர் பழனியப்பன், பரணி பார்க் சேகர், லார்ட்ஸ் பார்க் உமாசந்திரன், ஸ்டார் அரிமா நெஞ்சன், லாலாபேட்டை தண்டபாணி, மாநில நல்லாசிரியர் விஜயலெஷ்மி, அரவக்குறிச்சி சிவகுமார், வீனஸ் மங்கயர்கரசி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 
நிகழ்ச்சியில், முன்னாள் திண்டுக்கல் சரக மெட்ரிக். பள்ளி ஆய்வாளர் மேரி முதல் புத்தகப் பிரதியைப் பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அனைவரும் பிரதமர் எழுதிய புத்தகம் வாசித்தனர். 
கூட்டத்தில், கரூர், குளித்தலை, கடவூர், தோகைமலை, அரவக்குறிச்சி, மண்மங்கலம், கிருஷ்ணராயபுரம் பகுதிகளைச் சேர்ந்த தனியார் பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். 
நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் "குரோத் அறக்கட்டளை' சார்பில் அனைவருக்கும் பிரதமர் எழுதிய புத்தகம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com