கரூர் மாவட்டத்தில் 5 கல் குவாரிகள், உரிமையாளர் வீடுகளில்  வருமானவரித் துறையினர் சோதனை

கரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை 5 இடங்களில் உள்ள கல் குவாரிகள் மற்றும் அதன்  உரிமையாளர்களது

கரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை 5 இடங்களில் உள்ள கல் குவாரிகள் மற்றும் அதன்  உரிமையாளர்களது வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். 
    கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட க. பரமத்தி, பவித்திரம், தென்னிலை  மற்றும் தோகைமலை வட்டாரங்களில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. வரி ஏய்ப்பு தொடர்பான புகார் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு வந்ததையடுத்து, வியாழக்கிழமை திருச்சி வருமானவரித்துறை அதிகாரிகள் 20 பேர் கொண்ட குழுவினர் 4 பிரிவுகளாக  கரூர் மாவட்டத்தில் சடையம்பாளையம் கற்பகவிநாயகா புளுமெட்டல்ஸ், காருடையாம்பாளையம் பொன்விநாயகா புளுமெட்டல்ஸ், காட்டுமுன்னூர் திருமுருகன் புளுமெட்டல்ஸ், பாலவிநாயகா புளுமெட்டல்ஸ், குரும்பபட்டி முருகன் புளுமெட்டல்ஸ் ஆகிய குவாரிகள் செயல்படும் இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, கரூரில் கோவைச்சாலையில் உள்ள பொன்விநாயகா புளுமெட்டல் நிறுவன உரிமையாளர் பொன்னுசாமியின் வீடு, அலுவலகம் மற்றும் இதர குவாரிகளின் உரிமையாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சோதனை வெள்ளிக்கிழமையும் தொடரும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வருமான வரித்துறையினரின் இந்தச் சோதனையால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குவாரிகள் மூடப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com