உடல்பருமன் அறுவை சிகிச்சை விழிப்புணர்வு

கரூரில் உடல்பருமன் அறுவை சிகிச்சை விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கரூரில் உடல்பருமன் அறுவை சிகிச்சை விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவை ஜெம் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் பிரவின்ராஜ் பங்கேற்று, உடல் பருமன் நோய் ஏற்படுவதன் காரணம், அந்நோயை வரும் முன் தடுப்பதற்கான தினசரி உடற்பயிற்சி மிகவும் அவசியம் என விளக்கிக் கூறினார்.  தொடர்ந்து உடல் பருமன் கொண்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டார். 
இதில் 300-க்கும் மேற்பட்ட உடல்பருமன் கொண்டவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, மேலாளர் கார்த்திகேயன் செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com