"வாழ்க்கையை சுவைக்கப் பழக வேண்டும்'

வாழ்க்கையை சுவைக்கப் பழக வேண்டும். வாழ்வில் ஏற்படும் வெற்றி, தோல்வி அனைத்துக்கும் சரியான புரிதல் வேண்டும் என்றார் கவிஞர் நந்தலாலா.

வாழ்க்கையை சுவைக்கப் பழக வேண்டும். வாழ்வில் ஏற்படும் வெற்றி, தோல்வி அனைத்துக்கும் சரியான புரிதல் வேண்டும் என்றார் கவிஞர் நந்தலாலா.
கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோடை பண்பலையின் 18 ஆவது உதயவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிரித்து வாழ வேண்டும் என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது: 
வாழ்க்கை என்பது ஒரு கலை. ரசித்து வாழ வேண்டும். பம்பரம் சுழற்றிய காலத்தில் நாங்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டோம்.  ஆனால் இன்றைய குழந்தைகள் கணினி விளையாட்டில் தோல்வி வரும்போது பொறுக்க முடியாமல் விளையாட்டையே ஆஃப் (அணைத்து) விடுகிறார்கள். வாழ்வில் ஏற்படும் வெற்றி, தோல்வி அனைத்துக்கும் சரியான புரிதல் வேண்டும்.  
வாழ்க்கையில் ராமனாக, ராவணனாக இருப்பது நம் கையில்தான் இருக்கிறது. வாழ்க்கையை சுவைக்கப் பழக வேண்டும். வீடுகளில் குழந்தைகள் கார்ட்டூன் சேனல்களை ஏன் பார்க்கிறார்கள் என யோசியுங்கள். பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தை வீட்டில் உள்ளவர்கள் சமையல், டிவி, செல்லிடப்பேசி என மூழ்கிக் கிடப்பதைப் பார்த்து கார்ட்டூன் சேனலில் வரும் பாத்திரங்களுடன் பேசுகிறது. வாழ்க்கையில் எதையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும். சிரித்து வாழப் பழக வேண்டும். யார் மனதில் துணிச்சல் இருக்கிறதோ அவன்தான் சிரிப்பான். 
சிரிப்பவனிடம் துணிச்சல் இருக்கும். மனதை வீட்டில் வைத்திருக்கும் பிரிட்ஜ் போன்று வைத்திருக்க வேண்டும். ஏனெனில் பிரிட்ஜில் இருக்கும் பொருட்கள் கெடுவதில்லை. மனதும் அப்படித்தான். எவர் மனது  குளிர்ச்சியாக இருக்கிறதோ அவர் மனதில் இருப்பது எதுவும் கெடுவதில்லை என்றார்.
முன்னதாக கோடை பண்பலையின் இயக்குநர் முனைவர் பழ.அதியமான் வரவேற்றார். 
சிறப்பு விருந்தினர்களாக கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் செயலாளர் ஹேமலதா செங்குட்டுவன், கல்லூரி முதல்வர் சாலை பற்குணன், கோடை பண்பலை நிலைய பொறியாளர் சிவக்குமார்ஆகியோர் பங்கேற்றனர்.  முடிவில் கோடை பண்பலை நிகழ்ச்சி பொறுப்பாளர் சா.தனசேகரன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com