குட்கா, போதை பொருள்கள் விற்றால் வணிகர்களின் உரிமம் ரத்து: ஆட்சியர்

குட்கா, நிகோடின் பாக்கெட்டுகளுடன் கூடிய பான்மசாலா விற்றால் உணவு வணிகர்களின் உணவுப் பாதுகாப்பு

குட்கா, நிகோடின் பாக்கெட்டுகளுடன் கூடிய பான்மசாலா விற்றால் உணவு வணிகர்களின் உணவுப் பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன்.
  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
தமிழ்நாட்டில் குட்கா, நிகோடின் பாக்கெட்டுகளுடன் கூடிய பான் மசாலா, புகையிலை மற்றும் நிகோடின் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருட்களாக கொண்ட உணவுப் பொருட்களை விற்கத் தடை செய்யப்பட்டுள்ளது.  
இந்தத் தடை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  எனவே, இந்த தடை செய்யப்பட்ட பொருட்களை தயாரிப்பது, இருப்பு வைப்பது, வாகனங்களில் கொண்டு செல்வது, விநியோகிப்பது மற்றும் சில்லரை விற்பனை செய்வது குற்றமாகும்.  
அவ்வாறு செய்தால், சம்பந்தப்பட்ட உணவு வணிகரின் உணவுப் பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்படும். சில இடங்களில் உணவு வணிகர்கள் தவிர நடமாடும் கடைகள், காலணி விற்பனையகம், பேன்சி ஸ்டோர் மற்றும் ஹார்டுவேர் போன்ற உணவு வணிகர்கள் அல்லாதோர் கடைகளில் இந்தப் பொருட்களை பதுக்கி வைத்திருந்தாலும் அவர்களது தொழில் உரிமமும் ரத்து செய்யப்படும்.  
சிலர் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக புகார் பெறப்படுகிறது.  இனிவரும் காலங்களில் எந்த ஒரு குடியிருப்பு பகுதியிலும் தடை செய்யப்பட்ட 
பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால் அந்த வீடு மூடப்பட்டு "சீல்" வைக்கப்படும்.  
இது தவிர அந்த வீட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
மேலும், பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை மற்றும் உணவுப் பொருள் தொடர்பான அனைத்து புகார்களையும், உணவுப் பாதுகாப்பு துறையின் 94440 42322 என்ற கட்செவி அஞ்சல் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com