கரூர்

முதல்வர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க அக்.10 கடைசி நாள்

DIN

முதல்வரின் மாநில  இளைஞர் விருதுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க அக்டோபர் 10 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் ஆண்டுதோறும், விளையாட்டில் சிறந்து விளங்கும் தலா இரு வீரர், வீராங்கனைகள், இரு உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர், பயிற்றுநர்கள் ஆகியோருக்கு மாநில முதல்வர் விருது வழங்கி பரிசாக ரூ.1லட்சம், ரூ.10,000 மதிப்பிலான தங்கப்பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள். 
நிகழாண்டிற்கான மாநில முதல்வர் விருது பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விருது பெற உலகக் கோப்பை, தெற்காசிய விளையாட்டு போட்டிகள், விளையாட்டு இணையங்களினால் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகள்மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபர் போட்டிகளில் முதல் 3 இடங்கள் மற்றும் குழு போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்றிருத்தல் வேண்டும். ஒரு விருதிற்கு மூன்றிற்கு மேற்பட்ட விண்ணப்பங்களைஅதே வருடத்தில் அனுப்பக் கூடாது. 
விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.​c‌o‌m   என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.விண்ணப்பங்கள்அடங்கிய உறைமேல் முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம் என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உறுப்பினர் செயலர்,  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116 - ஏ.ஈ.வெ.ரா.சாலை நேரு பூங்கா சென்னை- 84  என்ற முகவரிக்கு வரும் அக்.10-ம் தேதிக்குள் சென்றடையுமாறு அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி வாக்காளா் அட்டையை ஒப்படைக்க முடிவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 60.41 அடி

உலக காசநோய் நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

‘கவிஞா் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி’

பேராவூரணியில் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்  மீட்பு

SCROLL FOR NEXT