இடைத்தேர்தலுக்கு நாளை முதல் வேட்புமனு

அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (ஏப்.22) முதல் தொடங்குகிறது.


அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (ஏப்.22) முதல் தொடங்குகிறது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகத்தில் வரும் மே 19ஆம் தேதி அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  அரவக்குறிச்சி தொகுதிக்கு வரும் 22ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம், 29ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள், 30ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை, மே 2ஆம் தேதி வேட்புமனு திரும்பப் பெறும் நாளாகும். 
மே 19ல் வாக்குப்பதிவு, 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை, 27ஆம் தேதி தேர்தல் நடைமுறை முடிவடையும். அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக கே. மீனாட்சியும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக ஏ. ஈஸ்வரன், மு. அமுதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை முறையே 9445074583, 9445000599,  9600439524 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். 
வேட்புமனுக்கள் அரவக்குறிச்சி வட்டாட்சியரகத்தில்  காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com