ஈஸ்டர் பண்டிகை ரூ.600 ஆக உயர்ந்த மல்லிகைப்பூ விலை

ஈஸ்டர் பண்டிகையை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு மல்லிகைப் பூவின் விலை ரூ.600 ஆக உயர்ந்தது. 


ஈஸ்டர் பண்டிகையை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு மல்லிகைப் பூவின் விலை ரூ.600 ஆக உயர்ந்தது. 
கரூர் மாரியம்மன் பூ மார்க்கெட் ரயில் நிலையம் அருகே செயல்படுகிறது. இங்குள்ள பூ மொத்தக் கடைகளுக்கு அரளிப்பூக்கள் திண்டுக்கல் மாவட்டம், பாளையம் பகுதியில் இருந்தும், செவ்வந்தி பூக்கள் சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்ற
ன. இவற்றைத் தவிர மல்லிகைப்பூ கரூர் மாவட்டத்தில் உள்ள மாயனூர், மணவாசி, எழுதியாம்பட்டி, லந்தக்கோட்டை, நாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விவசாயிகளால் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. 
மரிக்கொழுந்து அதிகளவில் லந்தக்கோட்டை பகுதியில் இருந்து கொண்டுவரப்படுகிறது. 
கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. 40 நாட்கள் தவக்காலமாக, துக்க காலமாக அனுசரித்த கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்து புனித வெள்ளியான 19ஆம் தேதி சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுதலை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுவதால் வீடுகளில் பூக்கள் அலங்காரம் சுவாமிகளுக்கு நடக்கும். இதனால் அதிகளவில் பூக்கள் வாங்குவார்கள். 
இதையடுத்து சனிக்கிழமை கரூர் மாரியம்மன் பூ மார்க்கெட்டில் மல்லிகைப் பூ வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. மேலும் அதன் விலையும் மூன்று மடங்காக உயர்ந்தது.
இதுகுறித்து மாரியம்மன் பூ மார்க்கெட்டின் மொத்த பூ வியாபாரி மணி குமார் கூறுகையில், கடந்த வாரத்தை விட இந்த வாரம் பூக்கள் விலை சற்று உயர்ந்துள்ளது. ஈஸ்டர் பண்டிகையால் கடந்த வாரம் கிலோ ரூ.200க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று ரூ. 600க்கு விற்றது. மேலும் வரத்துக் குறைந்ததால் செவ்வந்தி பூ கடந்த வாரம் ரூ. 200க்கு விற்றது தற்போது ரூ.300க்கும், மரிக்கொழுந்து ஒரு கட்டு ரூ.30க்கு விற்றது ரூ.40க்கும், இட்லிப் பூ ரூ. 20க்கு விற்றது ரூ.40க்கும் விற்பனையானது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com