நாதஸ்வர கலைஞர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்: எழுத்தாளர் ராமகிருஷ்ணன்

நாதஸ்வர கலைஞர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என்றார் சஞ்சாரம் நாவல் எழுதி 2018ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ராமகிருஷ்ணன். 

நாதஸ்வர கலைஞர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என்றார் சஞ்சாரம் நாவல் எழுதி 2018ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ராமகிருஷ்ணன். 
கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் வியாழக்கிழமை இந்திய கலாசாரம் மற்றும் கலைகளில் பன்மை வாதம் என்ற தலைப்பில் கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பில் நடைபெற்ற தேசியளவிலான கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது:
ஒரு கல்லூரியின் தகுதி என்பது அக்கல்லூரியின் வானளாவிய உயரம், பெரிய வளாகம், மாணவர்களின் எண்ணிக்கை போன்றவை அல்ல.  அக்கல்லூரியில் மாணவர்களின் எதிர்காலம் எப்படி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது, அங்கு மாணவர்களின் ஒழுக்கம்  என்பவைதான் தகுதியாக நிர்ணயிக்கப்படுகிறது. 
தகுதியான கல்லூரிக்கு இந்தக் கல்லூரி சான்றாக உள்ளது. தமிழ்மொழி என்பது 2500 ஆண்டுகளாகத்  தொடர்ந்து பேசப்படும், பயன்படுத்தப்படும் இடைவெளியே இல்லாத, பெரிய ஜீவநதியாக ஓடும் மொழி.  தமிழைத் தவிர வேறு எந்த ஒரு மொழிக்கும் இத்தகைய  சிறப்பு கிடையாது.  
ஒரு மனிதனை உருவாக்குவதில் பெரும்பங்கு நம் வீடாகத்தான் இருக்க முடியும். வீடு ஒருவனுக்கு பண்பாட்டையும், ஒழுக்கத்தையும் கற்றுத் 
தருகிறது. 
உன்னதமான இசைக் கச்சேரி நாதஸ்வரம். அவர்கள் இறைவனை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளத்தான் வாசிக்கிறார்கள். கடவுள் கோயிலை விட்டு, நடையை விட்டு வெளியே வருவதற்கு தங்களது இன்னிசையைப் பயன்படுத்துகிறார்கள். நாதஸ்வர கலைஞர்கள் எப்போதும், எதையும் எதிர்பார்ப்பதில்லை.  நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்றால் அது கேள்விக்குறிதான்.  
நாதஸ்வரம் நம் வாத்தியம் இல்லை என்ற மனப்போக்குதான் இன்றைய இளைஞர்கள் மத்தியில் உள்ளது.  நாதஸ்வரம் நாம் அனைவரும் கற்க வேண்டிய கருவி, நாம் அனைவரும் கொண்டாட வேண்டிய கருவி. ஆனால் அந்தக் கலைஞர்கள் இன்று கைவிடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பெரிய அங்கீகாரம் இல்லை.  அவர்கள் வாழ்க்கைத்தரம் அந்த அளவுக்கு சுகப்படவில்லை. அவர்கள் எதையும் கேட்பதில்லை என்ற நிலையில் அவர்களுக்கு தர மறுப்பது என்பது அநியாயம் என்பதால்தான் என்னை போன்றோர் அவர்களுக்காகக் குரல் கொடுக்கிறோம். 
ஆண்டாளுக்கு சூட்டிய மாலை அரங்கனுக்கும் சூட்டப்படும், அதுபோலத்தான் சாகித்ய அகாதெமி விருது எனக்கு அளிக்கப்பட்டபோது, அவர்களுக்கும் வழங்கப்பட்டது போன்றுதான் எண்ணுகிறேன். அவர்களது வாழ்க்கை அடையாளம் காட்டப்பட வேண்டும் என்பதற்காகத்தான் நாவல் எழுதினேன்.  
இசைப்பணியாக அவர்கள் சேவை செய்கிறார்கள். எந்தக் கருவியாக இருந்தாலும் நாதஸ்வர கருவியை மட்டும்தான் அதிக நேரம் ரசிக்க முடியும். எந்த நாட்டிலாவது நாதஸ்வரம் இசைக்கிறது என்றால் அங்கு ஒரு தமிழர் இருப்பதாகத்தான் அர்த்தம். இசைக் கலைஞர்களை எழுத்தாளர்கள் சொல்கிறோம் என்றால் அதை தெரிந்துகொள்ள வேண்டிய தலைமுறையினர் நீங்கள். அவர்களை மதியுங்கள், யாரெல்லாம் கற்றுத் தருகிறார்களோ அவர்கள் அனைவரும் குருதான். நாதஸ்வர கலைஞர்கள் மட்டுமின்றி மற்ற கலைஞர்களையும் போற்ற வேண்டும் என்றார். 
கருத்தரங்குக்கு கல்லூரித் தாளாளர் க. செங்குட்டுவன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சாலை பற்குணன் வரவேற்றார். ன்னதாக கரூர் சிவக்குமாரின் நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடைபெற்றது. கருத்தரங்கில் கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com