பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தினர் வாயிற்கூட்டம்

வரும் 18-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்வது குறித்து கரூரில் பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தினர் வியாழக்கிழமை வாயிற்கூட்டம் நடத்தினர்.

வரும் 18-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்வது குறித்து கரூரில் பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தினர் வியாழக்கிழமை வாயிற்கூட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி அலைக்கற்றை வழங்கிட வேண்டும், 1.2.2017 முதல் பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு மாற்றத்தை அமல்படுத்த வேண்டும், மூன்றாவது ஊதிய மாற்றம் 15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கத்தினர், அதிகாரிகள் சங்கத்தினர் வரும் 18,19,20-களில் நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 
இதுகுறித்து கரூரில் வியாழக்கிழமை சிறப்பு வாயிற்கூட்டம்  ஜவஹர் பஜார் தலைமை தொலைபேசி நிலையம் முன் நடைபெற்றது. தொலைத்தொடர்பு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஜி. கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சங்க கிளைச் செயலர் ஞானவேல் வரவேற்றார்.
கூட்டத்தில் வேலைநிறுத்தத்தின் நோக்கம், தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலர் ஏ. பாபுராதாகிருஷ்ணன், தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்சங்க மாநில துணைச் செயலர் ஏ. ராபர்ட்ஸ், அதிகாரிகள் சங்க மாவட்டச் செயலர் சசிக்குமார், முத்துக்குமார் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். இதில் ஊழியர்கள், அதிகாரிகள் திரளாக பங்கேற்றனர். ஊழியர் சங்க கிளைச் செயலர் எஸ். ரெங்கராஜ் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com