75 ரயில் நிலையங்களில் விரைவில் இணைய வசதி: சேலம் கோட்ட மேலாளர்

சேலம் கோட்டத்தில் 75 ரயில் நிலையங்களில் விரைவில் வைஃபையுடன் கூடிய இணைய வசதி ஏற்படுத்தப்படும் என்றார் கோட்ட மேலாளர் சுப்பாராவ்.


சேலம் கோட்டத்தில் 75 ரயில் நிலையங்களில் விரைவில் வைஃபையுடன் கூடிய இணைய வசதி ஏற்படுத்தப்படும் என்றார் கோட்ட மேலாளர் சுப்பாராவ்.
கரூர் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர், பொருள்கள் வைக்கும் அறை, நடைமேடை உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, வசதிகளை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து, கோட்ட மேலாளர் சுப்பாராவ் செய்தியாளர்களிடம் கூறியது:
கரூர் ரயில் நிலையத்தில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் பயணிகள் காத்திருப்போர் அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சேலம், கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன. இதே போல் கரூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும். தற்போது சேலம் கோட்டத்தில் உள்ள 8 ரயில் நிலையங்களில்  ஃவைஃபையுடன் கூடிய இணைய வசதி உள்ளது.  மேலும் 75 ரயில் நிலையங்களுக்கு இந்த வசதி விரிவுப்படுத்தப்படும் என்றார் அவர். ஆய்வின் போது, ரயில் நிலைய மேலாளர் சுரேந்திரபாபு, ரெயில்வே பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளர் தர்மாராம் பவாரி, உதவி ஆய்வாளர் குணா உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com