அதிமுக சார்பில் குதிரை வண்டி எல்கைப் பந்தயம்

கரூரில் மாவட்ட அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குதிரை வண்டி எல்கைப் பந்தயத்தில் பெரிய குதிரை

கரூரில் மாவட்ட அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குதிரை வண்டி எல்கைப் பந்தயத்தில் பெரிய குதிரை பிரிவில் கோவை குதிரைக்கு முதல் பரிசு கிடைத்தது.
 மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட அதிமுக சார்பில் குதிரை வண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை கரூரில் ஈரோடு சாலையில் உள்ள கரூர் பாலிடெக்னிக் அருகே நடைபெற்றது. பெரியகுதிரை, நடுக்குதிரை, புதுக்குதிரை என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற  போட்டிக்கு மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமை வகித்தார். நகரச் செயலர் வை. நெடுஞ்செழியன் வரவேற்றார். 
போட்டியை அதிமுக மாவட்டச் செயலரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடக்கி வைத்தார். கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ   எம். கீதா முன்னலை வகித்தார். 
போட்டியில் பெரியகுதிரை பிரிவில் கோவை ஆண்டவர் குதிரை முதலிடத்தையும், தஞ்சை மாவட்டம் அதிராமபட்டின்ம்  குதிரை இரண்டாமிடத்தையும், தஞ்சை அப்துல்லா குதிரை மூன்றாமிடத்தையும் பிடித்தன. நடுக்குதிரை பிரிவில் முதலிடத்தை கோவை சார்கனும், இரண்டாமிடத்தை ஈரோடு மாவட்டம், பவானி சிங்காரவேலனும், மூன்றாமிடத்தை திருச்சி நம்பி உதயசூரியனும் பிடித்தன. புதுக்குதிரை பிரிவில் முதலிடத்தை கரூர் பாரத் பஸ்கம்பெனி குதிரையும், இரண்டாமிடத்தை திருச்சி நம்பியாண்டார் நம்பியும், மூன்றாமிடத்தை திருச்சி அல்லூர் மூர்த்தி குதிரையும் பிடித்தன. போட்டிகளில் பெரிய குதிரை பிரிவில் ரூ.25,000, ரூ.20,000, ரூ.15,000 மற்றும் நடுக்குதிரை பிரிவில் ரூ.20,000, ரூ.15,000, ரூ.10,000 வழங்கப்பட்டது. புதுக்குதிரை பிரிவில் ரூ. 15,000, ரூ. 12,000, ரூ.10,000 வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலர் பசுவை சிவசாமி, பொருளாளர் கண்ணதாசன், இளைஞரணி செயலர் விசிகே.ஜெயராஜ், ஒன்றியச் செயலர்கள் மார்க்கண்டேயன், கமலக்கண்ணன், முன்னாள் நகர பாசறை செயலர் வேங்கை என். ராமச்சந்திரன், நகர பேரவை துணைத் தலைவர் டி.டி.செல்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com