"குழந்தைகளின் தனித்திறனை வெளிக்கொணர வேண்டும்'

குழந்தைகளின் தனித்திறனை வெளிக்கொணர வேண்டும் என்றார்  கேரள மாநிலம், திருச்சூர் மாவட்ட எஸ்பி பூங்குழலி.

குழந்தைகளின் தனித்திறனை வெளிக்கொணர வேண்டும் என்றார்  கேரள மாநிலம், திருச்சூர் மாவட்ட எஸ்பி பூங்குழலி.
கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடந்த மழலையர்களுக்கான தனித்திறனை வெளிப்படுத்தும் விழாவுக்கு பள்ளித்தாளாளர் ஆர்த்தி ஆர். சாமிநாதன் தலைமை வகித்தார்.  பள்ளி ஆலோசகர் பி. பழனியப்பன், பள்ளி முதல்வர் டி. பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஐபிஎஸ் அதிகாரி பூங்குழலி மேலும் பேசியது:
பெற்றோர்கள் குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.  குழந்தைகள் எத் துறையில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அவர்களை ஊக்கப்படுத்தி தோழமையுடன் பழக வேண்டும்.   குழந்தைகள் கைப்பேசி மற்றும் தொலைக்காட்சி பயன்படுத்துவதை தவிர்த்து  ஓடி விளையாடும் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்.  ஆசிரியர்கள் இரண்டாம் பெற்றோர்கள்  என்பதை உணர்ந்து குழந்தைகளோடு எளிமையாகப் பழகி அவர்களுடைய தனித்திறன்களை வெளிக்கொணர முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றார்.
விழாவில் பள்ளிக்குழந்தைகளின் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் யூகேஜி மாணவர் ஹரன் பிரணவ் 50 திருக்குறளையும், தனிமங்களின் பெயர்களையும், தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும்  கூறினார்.  முதலாம் வகுப்பு மாணவி யோகிதா தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் பெயர்களையும், மாணவர்  கைலாச வாசன் ஒவ்வொரு மாணவரும் தங்களின் பெற்றோர்களிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதைப் பற்றி விளக்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com