சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் சனிக்கிழமை தியாகிகள் தின ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கரூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் சனிக்கிழமை தியாகிகள் தின ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1982 ஆம் ஆண்டு ஜனவரி 19-இல் தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டத்தின்போது நாகை மாவட்டம் திருமெய்ஞானம் கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விவசாயிகள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோர் இறந்தனர். இவர்களின் நினைவாக ஆண்டுதோறும் ஜன.19-இல் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டும், விலைவாசி உயர்வு, பொது விநியோகத் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும், ஏழை விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆகியோர் சனிக்கிழமை மாலை தியாகிகள் தின கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.இலக்குவன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.முத்துச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் பொன்னுசாமி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில துணை தலைவர் பி.வசந்தாமணி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். இதில் சிஐடியு தொழிற்சங்கத்தினர், விவசாய சங்கத்தினர் திரளாகப் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com