டிஎன்பிஎல் ஆலை சார்பில் மகளிருக்கு பொங்கல் பொருள்கள் அளிப்பு

 டிஎன்பிஎல் ஆலை சார்பில் சமுதாய பொங்கல் விழா புஞ்சைபுகழூர் அரசு ஆண்கள்


 டிஎன்பிஎல் ஆலை சார்பில் சமுதாய பொங்கல் விழா புஞ்சைபுகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மகளிர் 510 பேருக்கு பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டன. 
சமுதாயப் பொங்கல் விழாவில், ஆலையைச் சுற்றியுள்ள 3 பேரூராட்சிகள் மற்றும் 5 ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 510 மகளிர் பங்கேற்றனர். 
விழாவை ஆலையின் செயல் இயக்குநர் (இயக்கம்) எஸ்.வி.ஆர்.கிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து, விழாவில் கலந்து கொண்ட மகளிருக்கு பொங்கல் வைப்பதற்கு தேவையான மண்பானை உள்ளிட்ட பொருள்களை வழங்கினார். 
விழாவில் ஆலையின் முதன்மை பொதுமேலாளர் (மனிதவளம்), பா.பட்டாபிராமன், முதன்மை பொதுமேலாளர் (வணிகம், மின்சாரம் மற்றும் கருவியியல்) ஹ.பாலசுப்பிரமணியன், முதன்மை தகவல் அலுவலர் மு.மனோகரன் ஆகியோர் தலைமை வகித்து விழாவில் சிறப்புரையாற்றினர். 
தொடர்ந்து தஞ்சாவூர் ஸ்ரீஹரி கலைக்குழுவினரின் பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், கோலாட்டம், காளியாட்டம், கருப்பசாமியாட்டம், பொய்க்கால் ஆட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், காவடியாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றன. மேலும் விழாவில் பள்ளி வளாகத்தில் ஜல்லிக்கட்டு காளைகள், ரேக்ளா மாட்டு வண்டிகள் பார்வைக்காக வைக்கப்பட்டது. மேலும், புகழிமலை கோலாட்டக் குழுவினரால் கோலாட்ட நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. 
ஏற்பாடுகளை டி.என்.பி.எல் நிறுவன மனிதவளத் துறையினர் சிறப்பாக செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com