தென்னிந்திய அறிவியல் கண்காட்சி:  கரூர் பள்ளி மாணவி சிறப்பிடம்

தென்னிந்திய ஜவாஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி சிறப்பிடம் பிடித்த கரூர் பி.ஏ.வித்யாபவன் பள்ளி

தென்னிந்திய ஜவாஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி சிறப்பிடம் பிடித்த கரூர் பி.ஏ.வித்யாபவன் பள்ளி மாணவியைப் பாராட்டினார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தங்கவேல்.
தென்னிந்திய அளவிலான 46 ஆவது ஜவாஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி பெங்களூருவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. 
இதில் கரூர் பி.ஏ.வித்யாபவன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு மாணவி எம்.பி. மித்ரா பங்கேற்று, மலைப்பகுதியில் உள்ள வளைவுகளில் ஏற்படும் விபத்துகளை தடுப்பது குறித்த தனது படைப்பினை சமர்ப்பித்து சிறப்பிடம் பிடித்தார். இதையடுத்து அவருக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன. 
சாதனை படைத்த மாணவி எம்பி. மித்ராவையும், வழிகாட்டி ஆசிரியர் ஏ.வெற்றிவேலையும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தங்கவேல் மற்றும் பள்ளி தலைவர் பி. அம்மையப்பன், துணை தலைவர் பி.கணேசன், பள்ளிச் செயலர் சுமதி சிவக்குமரன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கல்விசார் இயக்குநர் எஸ். பசுபதி, தலைமை ஆசிரியர் எஸ். சுகுமார், உதவி தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com