திமுக நெசவாளர் அணி நிர்வாகிகள் ஆலோசனை

கரூரில் திமுக நெசவாளர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கரூரில் திமுக நெசவாளர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்து திமுக நெசவாளர் அணியின் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் கலைஞர் அறிவாலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்திற்கு, மாநில நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் நாகலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக, மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக நெசவாளர்களை ஒருங்கிணைந்து களப்பணியாற்றுவது, தமிழகம் முழுவதும் உள்ள 12,617 ஊராட்சிகளில் ஊராட்சி சபை கூட்டம் நடத்தி தமிழக அரசின் மக்கள் விரோதப் போக்கினை அம்பலப்படுத்திய தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
 கூட்டத்தில், தி.மு.க. நெசவாளர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com