பறக்கும் படையினர் சோதனை: கேரள இளைஞர் உள்பட 4 பேரிடம் ரூ.6.42 லட்சம் பறிமுதல்

கரூர் மாவட்டம், குளித்தலையின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில்

கரூர் மாவட்டம், குளித்தலையின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதாக கேரள இளைஞர் உள்பட 4 பேரிடம் ரூ.6.42 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
குளித்தலை வட்டம், மேலக்கோரப்பாளையம் சோதனைச்சாவடியில்,தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான பறக்கும்படை குழுவினர் புதன்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்ட போது, இனுங்கூரைச் சேர்ந்த பாலமுருகன் (35) கேரள மாநிலம்,பையனூரில் வாழைத்தார்கள் விற்று வைத்திருந்த ரூ.1.32 லட்சம் ரொக்கம், திருச்சி மாவட்டம், சிறுகாம்பூரைச் சேர்ந்த சுரேஷ்குமார்(34)  கோழிக்கோட்டில் வாழைத்தார்கள் விற்று வைத்திருந்த ரூ.1.61 லட்சம் ரொக்கம் மற்றும், 
கேரள மாநிலம்,  எர்ணாகுளத்திலிருந்து பேட்டைவாய்த்தலையில் வாழைத்தார்கள் வாங்குவதற்காக வந்த ஷானவாஸ் (37) ஓட்டி வந்த மினிலாரியில் இருந்த ரூ.1.90 லட்சம் ரொக்கம் ஆகியவை உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபோல குளித்தலை - மணப்பாறை சாலையில், மைலாடி பகுதியில் கூட்டுறவுத்துறை சார்பதிவாளர் குமார் தலைமையிலான நிலைக் குழுவினர்
வாகனத் தணிக்கை நடத்தினர். அப்போது கொசூரிலிருந்து குளித்தலை நோக்கி 
இருசக்கர வாகனத்தில் வந்த நாச்சிப்பட்டி சுப்பையா (45),  பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வசூலான ரூ.1.59 லட்சத்தை வங்கியில் செலுத்துவதற்காக சென்ற போது, உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.
குளித்தலை பகுதியில் புதன்கிழமை மட்டும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6.42 லட்சத்தை பறக்கும்படை, நிலைக் குழுவினர் உதவித் தேர்தல் நடத்தும்அலுவலர் எம். லியாகத்திடம் ஒப்படைத்தனர். அப்போது குளித்தலை வட்டாட்சியர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com