கரூர்

காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

DIN

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்தை கட்சிசார்பற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலாயுதம்பாளையம் அடுத்த பொன்னியகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் வீராசாமி(55). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் நீரா பானம் இறக்கி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், புதன்கிழமை மாலை அங்கு சீருடையின்றி வந்த வேலாயுதம்பாளையம் போலீஸார் மாமூல் கேட்டு மரத்தில் கட்டியிருந்த பானைகளை கற்களை வீசி உடைத்தார்களாம். 
தகவலறிந்த கட்சி சார்பற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் பாபு தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வியாழக்கிழமை வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த காவல் ஆய்வாளர் வேலுசாமி  பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் கலைந்து சென்றனர். 
இதுதொடர்பாக கட்சி சார்பற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் பாபு கூறியது: 
தமிழக அரசு நீரா பானம் இறக்கி விற்க அனுமதித்துள்ளது.   மாமூல் தரவில்லை எனப் போலீஸார் வீராசாமி தோட்டத்திற்குள் புகுந்து பானைகளை உடைத்திருப்பதை கண்டிக்கிறோம். கரூரில் 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது. இதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்காமல், விவசாயிகளை இனி துன்புறுத்தினால் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT