பெரம்பலூர்

ஊர்ப் பெயர்களை தமிழ் உச்சரிப்பு போன்று ஆங்கிலத்தில் அமைக்க நடவடிக்கை

DIN


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போல ஆங்கிலத்தில் அமைக்க நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ் நாட்டில் உள்ள ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போலவே ஆங்கிலத்திலும் அமைத்திட 2018-19 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையில், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, திருவல்லிக்கேணி என்பதை ட்ரிப்ளிக்கேன் என ஆங்கிலத்தில் (எழுத்துக் கூட்டல்) குறிப்பிடாமல் திருவல்லிக்கேணி என்றே ஆங்கிலத்தில் உச்சரிப்பும், எழுத்துக் கூட்டலும் அமையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியினை செயல்படுத்த, பெரம்பலூர் மாவட்டத்தில் உயர்நிலைக் குழு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு, ஊர் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் ஊர் பெயர்களின் பட்டியலை அதற்கு இணையான ஆங்கில எழுத்துக் கூட்டலை மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் மாற்றி அமைக்கப்படும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் பெயர்களின் உச்சரிப்பு தமிழில் அமைந்துள்ளது போலவே ஆங்கிலத்தில் அதன் ஒலிக்குறிப்பு மாறாமல் அமைந்திட நடவடிக்கை மேற்கொண்டு மாற்றப்பட வேண்டிய ஊர் பெயர்களின் பட்டியலை அதற்கு இணையான ஆங்கில உச்சரிப்பு எழுத்துக் கூட்டலையும் உரிய படிவத்தில் நிறைவு செய்து, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அரியலூர்: இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உயர்நிலைக்குழு, ஆலோசனைக் குழு அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம், ஊர் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் ஊர்ப் பெயர்களின் பட்டியலை அதற்கு இணையான ஆங்கில எழுத்துக் கூட்டலை மாவட்ட ஆட்சியர் பரிந்துரையுடன் மாற்றி அமைக்கப்பட உள்ளது.
இதற்காக, வரிசை எண், வட்டம், ஊர்ப் பெயர், தற்போதைய ஆங்கில எழுத்துக்கூட்டல், திருத்தி அமைய வேண்டிய ஆங்கில எழுத்துக்கூட்டல் எனும் வரிசையில் மாதிரி படிவம் மூலம் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர்ப்பெயர்களின் உச்சரிப்பு தமிழில் அமைந்துள்ளது போன்று ஆங்கிலத்திலும் அதன் ஒலிக்குறிப்பு மாறாமல் அமைத்திட, மாற்றப்படவேண்டிய ஊர்களின் பெயர்ப் பட்டியலை அதற்கு இணையான ஆங்கில உச்சரிப்பு எழுத்துக் கூட்டலுடன் குறிப்பிட்ட படிவ வரிசையில் நிறைவு செய்து, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அரியலூர் - 621704 என்ற முகவரிக்கு பொதுமக்கள் அனுப்பி வைக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT