பெரம்பலூர்

நவ. 20-இல் கோட்டை எதிரே முற்றுகைப் போராட்டம்: பால் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

DIN

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நவ. 20 ஆம் தேதி சென்னை கோட்டை எதிரே முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றார் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலர் கே. முகமது. 
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் ஏ.எம். முனுசாமி தலைமை வகித்தார். செயலர் என். செல்லதுரை முன்னிலை வகித்தார். 
கூட்டத்தில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது: பால் பவுடர், பால் பொருள்களை இறக்குமதி செய்வதைத் தடை செய்ய வேண்டும். பசும் பால் லிட்டருக்கு ரூ. 28 லிருந்து ரூ. 35-க்கும், எருமைப் பாலுக்கு ரூ. 35 லிருந்து ரூ. 45-க்கு கொள்முதல் விலையை உயர்த்திட வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை ரூ. 225 கோடியை முழுவதையும் வழங்கிட வேண்டும். குழந்தைகளுக்கு சத்துணவில் பாலையும் சேர்த்து வழங்கிட வேண்டும். ஆரம்ப சங்கப் பணியாளர்கள் சம்பளத்தில் 50 சதவீதத்தை ஆவின் நிறுவனம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்களை ஒன்றிணைத்து வரும் 20 ஆம் தேதி சென்னை கோட்டை எதிரே முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றார் சங்க மாநில பொதுச் செயலர் கே. முகமது. 
கூட்டத்தில், பொறுப்பாளர்கள் ஏ.கே. ராஜேந்திரன், வரதராஜன், கருப்புடையார், சின்னசாமி, கோகுலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT