மறியல்: மின்வாரிய ஊழியர்கள் 205 பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பைச் சேர்ந்த 205 மின் ஊழியர்களைப் போலீஸார் கைது செய்தனர். 
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டத் தலைவர் கே. கண்ணன் தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் எஸ். அரவன், ஜெ. ஜெயபால், ஏ. அபிமன்னன், பி. தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் எஸ். அகஸ்டின், வட்ட பொருளாளர் வி. தமிழ்ச்செல்வன், வட்ட இணைச் செயலர் ஆர். ராஜகுமாரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். செல்லதுரை, வட்டச் செயலர்கள் ஏ. ரவிச்சந்திரன், ஏ.கணேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.  
ஆர்ப்பாட்டத்தில், தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலியாக ரூ. 380 வழங்க வேண்டும். ஊக்கத்தொகை மற்றும் கருணைத் தொகை வழங்க வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கி வருகைப் பதிவேடு பராமரிக்க வேண்டும். விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 205 பேரைப் பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com