பெரம்பலூரில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு தலைமை வகித்த ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்ரமணியம் பேசியது:  மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில்வதோடு மட்டுமல்லாமல், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும். பெற்றோர் சொல்படி கேட்டு நடத்தல் வேண்டும் என்றார் அவர்.  
தொடர்ந்து, கல்வி நிறுவனங்களின் செயலர் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலையில், பாட்டு ஒப்பித்தல், கதை சொல்லுதல், மறு சுழற்சி கைவினைப்பொருள்கள் செய்தல் மற்றும் வரைபடம் வரைதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவையொட்டி, மாணவர்களின் நடனம், இசைக் கருவி வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் கோமதி, ஒருங்கிணைப்பாளர்கள் கலையரசி, மதுரா மற்றும் உடற்கல்வி ஆசிரியர் தினேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சிகளை மாணவிகள் தர்ஷினி, லாவண்யா ஆகியோர் தொகுத்து வழங்கினர். 
மாணவிகளில் சர்விகா வரவேற்றார். கீர்த்தி நன்றி கூறினார். இதேபோல, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com