நவ. 19-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நவ. 19-ல் நடைபெற உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நவ. 19-ல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. ராமசுப்ரமணியராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் மாவட்ட பிரிவு சார்பில் 2018- 2019 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் டாக்டர்.எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளன. 
தடகள விளையாட்டுப் போட்டிகளில் கை, கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், மனநலன் பாதிக்கப்பட்டவர் மற்றும் காது கேளாதோர் ஆகியோருக்கு ஆண், பெண் இருபாலாருக்கும் தனித்தனியாக போட்டி நடைபெற உள்ளது. இதில், கை, கால் ஊனமுற்றோர் பிரிவில் 50 மீ ஓட்டம், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் கால் ஊனமுற்றோருக்கும், கை ஊனமுற்றோருக்கு 100 மீ ஓட்டப் பந்தயமும், குள்ளமானவர்களுக்கு 50 மீ ஓட்டப்பந்தயமும், இருகால்களும் ஊனமுற்றோருக்கு 100 மீ சக்கர நாற்காலி போட்டிகளும் நடைபெற உள்ளன.
பார்வையற்றோர் பிரிவில், முற்றிலும் பார்வையற்றோருக்கு 50 மீ. ஓட்டமும், குண்டு எறிதல் போட்டிகளும், மிகக்குறைந்த பார்வையற்றோருக்கு 100 மீ ஓட்டப்பந்தயம், நின்ற நிலை தாண்டுதல், பந்து எறிதல் போட்டிகளும் தனித்தனியாக நடைபெற உள்ளது.
மனநலன் பாதிக்கப்பட்டவர் பிரிவில் புத்தி சுவாதினம் முற்றிலும் இல்லாதோருக்கு 50 மீ. ஓட்டம், பந்து எறிதல் போட்டிகளும், புத்தி சுவாதினம் நல்ல நிலையில் இருப்போருக்கு 100 மீ ஓட்டப்பந்தயம், பந்து எறிதல் ஆகிய போட்டிகளும், மூளை நரம்பு பாதிப்பு (செரிபரல் பராலிசிஸ்) உள்ளோருக்கு நின்ற நிலையில் தாண்டுதல் போட்டிகளும் நடைபெற உள்ளன. 
காது கேளாதோர் பிரிவில் 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டப்பந்தயமும், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய தடகள விளையாட்டு போட்டிகளும் நடைபெற உள்ளன. 
குழு விளையாட்டுப் போட்டிகள்:
கை,கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், மனநலன் பாதிக்கப்பட்டோர், காது கோளாதோர் ஆகியோருக்கான போட்டிகள் இருபாலாருக்கும் தனித்தனியாக நடைபெறும். கை,கால் ஊனமுற்றோர் பிரிவில் இறகுப்பந்து விளையாட்டு (ஒற்றையர்- இரட்டையர்) ஒரு குழுவுக்கு 5 பேர் பங்கேற்கலாம். மேஜைப்பந்து விளையாட்டில் குழுவுக்கு 2 பேர் பங்கேற்கலாம். பார்வையற்றோர் பிரிவில் கையுந்துபந்து (அடாப்டட் வாலிபால்) விளையாட்டில் ஒரு குழுவுக்கு 7 பேரும், மனநலன் பாதிக்கப்பட்டோர் பிரிவில் எறிபந்து விளையாட்டில் ஒரு குழுவுக்கு 7 பேரும், காது கோளாதோர் பிரிவில் கபடி ஒரு குழுவுக்கு 7 பேரும் பங்கேற்கலாம்.
போட்டிகளில் பங்கேற்போர் அரசு வழங்கிய அடையாள அட்டையை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும். முதல் 3 இடங்களை பெறுவோருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். இவர்கள் மாநில போட்டிகளில் பங்கேற்க முடியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com