பெரம்பலூர்

நரிக்குறவர் இனத்தை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்

DIN


தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு சார்பில், சாதி ஆணவப் படுகொலை எதிர்ப்பு 2-வது மாவட்ட மாநாடு, பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை வளாக கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் என். செல்லதுரை தலைமை வகித்தார். மருத்துவர் கழக மாநில செயலர் சி. கருணாகரன் மாநாட்டை தொடக்கி வைத்தார். பொறுப்பாளர் எம். கருணாநிதி அறிக்கை வாசித்தார். மாநாட்டில், சமத்துவ வானின் மனிதப் பறவைகள் என்னும் தலைப்பில் கவிஞர் அகவி தலைமையில், கவிஞர்கள் தேவன்பு, சு. நாகராஜூ, பெ. சத்தியநேசன், சுரேஷ்குமார், வா.ரா. பிரபாகரன் ஆகியோரின் கவியரங்கம் நடைபெற்றது.
இருக்கிறது என்பானும் என்னும் தலைப்பில் கவிஞர் இரா. எட்வின், இளைஞர்களும்- தீண்டாமையும் என்னும் தலைப்பில் பேராசிரியர் ப. செல்வகுமார், இந்து மதமும்- தீண்டாமையும் என்னும் தலைப்பில் அறிவழகன், பெண்களும்- தீண்டாமையும் என்னும் தலைப்பில் மருத்துவர் ஜெயலட்சுமி, தீண்டாமையும்- சமூக நீதியும் என்னும் தலைப்பில் வழக்குரைஞர் ப. காமராசு, நவீன தீண்டாமை ஆய்வு என்னும் தலைப்பில் பேராசிரியர் தேவகி, இந்துத்வாவும், இட ஒதுக்கீடும் என்னும் தலைப்பில் வழக்குரைஞர் இரா. ஸ்டாலின், தொழிலாளிகளும்- தீண்டாமையும் என்னும் தலைப்பில் சிஐடியு நிர்வாகி பி. முத்துசாமி ஆகியோர் பேசினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைச் செயலர் ஜெயசீலன் சிறப்புரையாற்றினார்.
இந்த மாநாட்டில், இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பாதுகாக்க வேண்டும். வி. களத்தூரில் இந்து, முஸ்லிம் மக்களிடையே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேணடும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தனியார் பள்ளி, கல்லூரிகளில் தலித் மாணவர்களிடம் முறைகேடாக கட்டணம் வசூலிப்பது, உயர் கல்வித் துறையில் இந்துத்துவா கருத்துகளைத் திணிப்பதை தவிர்க்க வேண்டும்.
பஞ்சமி நிலத்தை மீட்டு தலித் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டம் சீர்குலைவை தவிர்க்க வேண்டும். தலித் இனத்தோரை பட்டியல் இனத்திலும், குறவர் இன மக்களை பழங்குடி இன பட்டியலிலும் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் வீ. ஞானசேகரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் தாஹீர் பாஷா, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் குமரி ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். துணைச் செயலர் எஸ்.பி.டி. ராஜாங்கம் வரவேற்றார். பொறுப்பாளர் சி. சண்முகம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.75 லட்சம் பறிமுதல்

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT