பெரம்பலூர்

பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்பு

DIN


பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில், புனித தோமினி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான தொடுவானம் என்னும் தலைப்பில் நீட் மற்றும் ஜே.இ.இ. பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
அதன்படி, பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தாவரவியல் பாடப் பயிற்சியில், குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுநிலை தாவரவியல் ஆசிரியர் காமராஜ், பயிற்சி அளித்து மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். நக்கசேலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜ், புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியை கீதா ஆகியோர் பயிற்சி வகுப்பை பார்வையிட்டனர்.
குன்னம் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, துங்கபுரம், பேரளி, மருவத்தூர், கவுல்பாளையம், பெரம்பலூர் ஆகிய அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT