போலீஸாரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: பாமக முடிவு

மங்கலமேடு போலீஸாரைக் கண்டித்து, பெரம்பலூரில் நவ. 26 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த பா.ம.க பூத் கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மங்கலமேடு போலீஸாரைக் கண்டித்து, பெரம்பலூரில் நவ. 26 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த பா.ம.க பூத் கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சி டார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம், பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
அக்கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வன்னியர் சங்க மாநிலச் செயலர் வைத்திலிங்கம், வரும் மக்களவைத் தேர்தலில் பூத் கமிட்டி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், கட்சி நிர்வாகிகள் செயலாற்றும் முறைகள் குறித்து விளக்கினார். 
கூட்டத்தில், பாரபட்சமாக நடவடிக்கை எடுக்கும் மங்களமேடு காவல் நிலையத்தை கண்டித்து நவ. 26-ல் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் எதிரே பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் மற்றும் குன்னம் சட்டப்பேரவை தொகுதிகளில், தேர்தல் நேரத்தில் பா.ம.க வெற்றிக்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும்.
நவ. 25 -ல் சென்னையில் நடைபெறும் பா.ம.க மகளிர் மாநாட்டுக்கு, பெரம்பலூர்- அரியலூர் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்பது. இனிவரும் காலங்களில் பவுர்ணமி அன்று ஒவ்வொரு கிராமங்களிலும் கிளை அமைப்பு சார்பில் கூட்டம் நடத்த வேண்டும். கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் அன்புமணி ராமதாஸை முதல்வராக்கும் வரை தேர்தல் பணியாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
மாநில துணைத் தலைவர் ராஜேந்திரன், அரியலூர் மாவட்ட செயலர் கண்ணன், வன்னியர் சங்க மாவட்ட செயலர் செல்ல ரவி, உழவர் பேரியக்க நிர்வாகிகள் ராஜேந்திரன், ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com