பெரம்பலூர்

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

DIN

மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த விளையாட்டுப் போட்டிகளை சிறப்பு ஒலிம்பிக் பிரிவு செயலர் பால் தேவ சகாயம் தொடக்கி வைத்தார். இதில் ஆண்கள், பெண்களுக்கான கால் ஊனமுற்றோர், கை ஊனமுற்றோர், கால் ஊனமுற்றோர், இருகால்களும் ஊனமுற்றோர், முற்றிலும் பார்வையற்றோருக்கான போட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான தடகளம் மற்றும் குழுப்போட்டிகள் நடைபெற்றது.
தடகள விளையாட்டில் 426 நபர்களும், குழு விளையாட்டுப் போட்டிகளில் 500 நபர்களும் என மொத்தம் 926 நபர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார் மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் எஸ். காமாட்சி.  இதில், மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம், மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வு சங்கம், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. ராமசுப்ரமணியராஜா வரவேற்றார். தடகளப் பயிற்றுநர் க. கோகிலா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT