மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.  

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.  
தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாதவர்களுக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. 
18 வயது முதல் 45 வயது வரையுள்ள இருபாலரும் விண்ணப்பிக்கலாம். அரசு மற்றும் தனியார் தையல் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இதுவரை அரசு துறைகளில் தையல் இயந்திரம் பெறாதவராக இருக்க வேண்டும். 
தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் தங்களது அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், தையல் பயிற்சி பெற்றதற்கான சான்று, மாற்றுச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரில் அல்லது அஞ்சல் மூலமாக நவ. 28-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04328 - 225474 என மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com