வியாழக்கிழமை 20 செப்டம்பர் 2018

குழந்தைத் தொழிலாளர் விழிப்புணர்வுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

DIN | Published: 11th September 2018 08:51 AM

பெரம்பலூரில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட 335 மனுக்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.  தொடர்ந்து, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவ, மணாவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் வே.சாந்தா பரிசு  வழங்கினார். 
 

More from the section

தமிழக ஆளுநர் இன்று  பெரம்பலூர் வருகை
சிறுவாச்சூர் பகுதியில் செப்டம்பர் 20 மின் நிறுத்தம்
கடத்தப்பட்ட கணவரை மீட்டுத்தரக்கோரி இளம்பெண் ஆட்சியரிடம் மனு
அதிமுக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
குரும்பலூர் பள்ளியில் தூய்மை இயக்கப் பணி