செவ்வாய்க்கிழமை 18 செப்டம்பர் 2018

மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

DIN | Published: 12th September 2018 07:42 AM

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பெரம்பலூர் மாவட்ட கிளை சார்பில், இடதுசாரி சிந்தனையாளர்கள், தலித் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமுஎகச மாவட்டச் செயலர் ப. செல்வக்குமார், ததீஒமு மாவட்டச் செயலர் எம். கருணாநிதி ஆகியோர் தலைமை வகித்தனர். 
பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் என். செல்லதுரை, அகவி, வீ. ஞானசேகரன், ஏ. கலையரசி, செ. துரைராஜ், ஜஹாங்கிர் பாட்சா, பி. தயாளன், அக்ரி ஆறுமுகம், வழக்குரைஞர் பி. காமராசு, தாஹிர்பாட்சா, அசன்முகது ஆகியோர் இடதுசாரி சிந்தனையாளர்கள், தலித் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து பேசினர். 
ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த எஸ். அகஸ்டின், இரா. ஸ்டாலின், இரா. எட்வின், ம. செல்வபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

More from the section

கறவை மாடு பராமரிப்பு, காகிதப் பை தயாரிப்பு பயிற்சி பெற அழைப்பு
இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
பூட்டிய வீட்டை திறந்து விடக்கோரி எஸ்.பி அலுவலகத்தில் மனு
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தடையை மீறி ஊர்வலம் நடத்த முயன்ற 40 பேர் கைது:  தடியடியில் 20 பேர் காயம்