அதிமுக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க அரசைக் கண்டித்து, பெரம்பலூர் புகர் பேருந்து நிலைய வளாகத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அ.தி.மு.க அரசைக் கண்டித்து, பெரம்பலூர் புகர் பேருந்து நிலைய வளாகத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும், கட்சியின் கொள்கை பரப்பு செயலருமான ஆ. ராசா மேலும் பேசியது: 
குட்கா ஊழல், பொதுப்பணித்துறை ஒப்பந்தம் ஆகிய ஊழல்களில் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் முதல், காவல்துறை தலைவர் வரை கோடிக்கணக்கில் கொள்ளையடித்தது ஆதாரத்துடன் வெளிவந்துள்ளது. 
ஆனால், இதுவரை அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில், இப்போது கமிசன், கலெக்சன், கரெப்சன் ஆட்சி நடைபெறுகிறது. ஊழல் மலிந்த தமிழக ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல், மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. மக்கள் விரோத அ.தி.மு.க ஆட்சியை விரைவில் தூக்கியெறிந்து, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சியமைக்க அனைவரும் சபதம் ஏற்போம் என்றார் ராசா.
மாவட்ட செயலர் சி. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு. அட்சயகோபால், என். ராஜேந்திரன், மாநில நிர்வாகிகள் பா. துரைசாமி, செ. வல்லபன், வி.எஸ். பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் கி. முகுந்தன், பட்டுச்செல்வி ராஜேந்திரன், சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர செயலர் எம். பிரபாகரன் நன்றி கூறினார். 
அரியலூர்: அரியலூர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், குட்கா ஊழல், சி.பி.ஐ. விசாரணையில் சிக்கிய அமைச்சர், காவல்துறை அதிகாரிகள் பதவி விலக வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.எஸ்.சிவசங்கரன் தலைமை வகித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com