தமிழக ஆளுநர் இன்று  பெரம்பலூர் வருகை

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக புதன்கிழமை (செப். 19) பெரம்பலூர்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக புதன்கிழமை (செப். 19) பெரம்பலூர் வருவதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
பெரம்பலூர் வருகை தரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலை 10 மணியளவில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் முதலாவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். 
இதில், தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ். கீதாலெட்சுமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். 
பின்னர், பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்கிறார். தொடர்ந்து, மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரை மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுகிறார். 
பின்னர், மாலை 4.50 மணியளவில் பெரம்பலூர் நகராட்சி வளாகத்தில் மத்திய அரசின் தூய்மை பாரதத் திட்ட உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதையடுத்து, பெரம்பலூர் ஒன்றியத்துக்குள்பட்ட செங்குணம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிடும் ஆளுநர், இரவு அரியலூர் மாவட்டம் செல்கிறார். 
தமிழக ஆளுநரின் வருகையை முன்னிட்டு, 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com