அமமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் என்.கிருஷ்ணகுமார், பொருளாளர் வி.பி.அன்பழகன், ஒன்றியச் செயலாளர்கள் என்.சேகர், என்.எம்.செல்வக்குமார், செ.வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.பி.ஆதித்தன், வழக்குரைஞர் பிரிவு துணைச் செயலாளர் கே. குலோத்துங்கன், பேச்சாளர் எஸ். லட்சுமணன் ஆகியோர் அண்ணாவின் அரசியல் வரலாறு, சாதனைகள், செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினர். நகர்மன்ற முன்னாள் தலைவர் சி.ரமேஷ், மாவட்ட இணைச் செயலாளர் கெளரி ஜெயராமன், துணைச் செயலர்கள் எஸ்.கண்ணுசாமி, மைதிலி கோபிநாத், பேரூர் செயலர்கள் கே.சரவணன், ஏ.ஜாபர் உசேன், எம்.கமல்ராஜ், பி.சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.                                                     
அரியலூர்: அரியலூர் பேருந்து நிலையம் அருகே அமமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் துரை.மணிவேல் தலைமை வகித்து பேசியது: தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஊழல் ஆட்சி விரைவில் முடிவுக்கு வந்துவிடும்.துரோகிகளை அரசியலில் இருந்து ஓரங்கட்டத்தான் அமமுக ஆரம்பிக்கப்பட்டது. வருகிற தேர்தல்களில் அனைத்து தொகுதிகளிலும் அமமுக வெற்றி பெற்று அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் சிறப்பான ஆட்சியை டிடிவி.தினகரன் தருவார் என்றார் அவர்.
மாவட்ட அவைத் தலைவர் முத்தையன், இணைச் செயலர் ஜெயசுதா, துணைச் செயலாளர்கள் பழனிவேல்,  தமிழரசி முருகன், ஒன்றியச் செயலாளர்கள் மருதை, பருக்கல் புகழேந்தி, வடிவேல் முருகன், கோகுல்,  சுந்தரமூர்த்தி, ஜயங்கொண்டம் நகரச் செயலர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்புச் செயலாளர்  பாளை து.அமரமூர்த்தி,  தலைமை கழகப் பேச்சாளர் ஆரணி கலைமுரசு ஆகியோர் பேசினர். முன்னதாக, நகரச் செயலர் ஏ.ஆர்.வி.தமிழரசன் வரவேற்றார். முடிவில் மாவட்ட வழக்குரைஞர் பிரிவு தலைவர் கமலகண்ணன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com