பெரம்பலூர்

குவாரி நீரில் மூழ்கி மாணவர்கள் 2 பேர் சாவு

DIN


பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு அருகே நண்பர்களுடன் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் சுண்ணாம்புக்கல் குவாரி நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள லப்பைகுடிகாடு கிராமத்தைச் சேர்ந்த சையது அலி மகன் முகமது ரசீன் (18). இவர், சென்னையில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், அதே பகுதியைச் சேர்ந்த ஜாகீர் உசேன் மகன் அபுல் ஹசன் (18), திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியிலும் முதலாமாண்டு படித்து வந்தனர்.
இவர்கள் இருவரும், தனது நண்பர்களான ஜாகீர் உசேன் மகன் அக்தர் பர்வேஷ் (18), காதர் (18), இம்ரான் (18), இலியாஸ் மகன் அசரப் (18), உமர் (18), அமீர் பாசில் (18) ஆகியோருடன், வேப்பூர் அருகே கோவிந்தராஜபட்டினம் கிராமத்தில் உள்ள சுண்ணாம்புக்கல் குவாரியில் தேங்கியிருந்த நீரில் சனிக்கிழமை மாலை குளிக்கச் சென்றனர். இவர்கள் அனைவருக்கும் நீச்சல் தெரியாது எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், குவாரியின் கீழே இறங்கி சுற்றுச்சுவரை பிடித்துக்கொண்டு குளித்த முகமது ரசீன், அபுல் ஹசன் இருவரும் நீரில் தவறி விழுந்து மூழ்கினர். இதையறிந்த அவர்களது நண்பர்கள், காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, நீண்ட நேரத்துக்குப் பிறகு அபுல் ஹசன் உடலை மீட்டனர்.
போதிய உபகரணங்கள் இல்லாததால், மற்றொரு மாணவனின் உடலை தேடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், உள்ளூர் பொதுமக்களின் உதவியுடன் முகமது ரசீன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக, குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக கூட்டணி ஆட்சியில் புதுவையை வளமாக்கும் திட்டங்கள் -ஜி.கே.வாசன்

தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி தொகுதியில் 21 வேட்பு மனுக்கள் ஏற்பு -16 மனுக்கள் தள்ளுபடி

100% வாக்களிப்பு: மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT