பெரம்பலூர்

வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம் ஆய்வு

DIN

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 652 வாக்குச்சாவடி மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்த சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
        இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2019 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடைந்த நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் 1.9.2018 முதல் 31.10.2018 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற உத்தரவிட்டுள்ளது. 
அதன்படி, பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடிகளிலும், குன்னம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 320 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, மங்களமேடு டி.இ.எல்.சி அரசு தொடக்கப்பள்ளி, தேவையூர் அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா கூறியது: 
இந்த சிறப்பு முகாம்களில் பெயர் சேர்த்தலுக்கு படிவம் 6, பெயர் நீக்கலுக்கு படிவம் 7, திருத்தம் மேற்கொள்வதற்கு படிவம் 8, முகவரி மாற்றம் (ஒரே சட்டப்பேரவை தொகுதிக்குள்) படிவம் 8 -ஏ வழங்கப்படுகிறது. மேலும், அக். 7 மற்றும் அக். 14 ஆகிய தேதிகளிலும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்களிலும், இதர நாள்களிலும் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் அலுவலக வேலை நேரங்களில் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றார் அவர். ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், வருவாய் வட்டாட்சியர் பொன்னுதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT