இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் விருதுகள்

பெரம்பலூர் மாவட்ட இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், சிறந்த இளைஞர்களுக்கான விருது வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், சிறந்த இளைஞர்களுக்கான விருது வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர்- துறையூர் சாலையில் உள்ள சாரண, சாரணியர் அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு, பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் அ. மாரி மீனாள் தலைமை வகித்தார். இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்டச் செயலர் என். ஜெயராமன், மாவட்ட சாரண பயிற்சி ஆணையர் ஜி. செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கு. அருளரங்கன், சிறந்த இளைஞர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில், 75 மாணவர்களுக்கு சிறந்த ஜூனியர் விருதுகளும், 21 ஆசிரியர்களுக்கு சிறந்த கவுன்சிலர் விருதுகளும், 12 பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிக்கான விருதுகளும், 9 ஆசிரியர்களுக்கு சிறந்த சேவைக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.
மாவட்டக் கன்வீனர் வி. ராதாகிருஷ்ணன் கருத்துரை வழங்கினார்.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் ராமதாஸ், ஜோதிலட்சுமி இளங்கோவன், இந்திய செஞ்சிலுவை சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் எம். கார்த்திகேயன், களரம்பட்டி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
மாவட்டப் பொருளாளர் மு. கருணாகரன் வரவேற்றார். இணை கண்வீனர் எம். ஜோதிவேல் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை இணை கன்வீனர்கள் டி. மாயக்கிருஷ்ணன், ஆர். ராஜமாணிக்கம், ஆர். துரை ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com