தேர்வு முகாமில் பங்கேற்க படித்த இளைஞர்களுக்கு அழைப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு பல்வேறு தொழிற்பயிற்சிகளுக்கான பயிற்சியாளர்கள் தேர்வு முகாம் ஒன்றியங்கள் வாரியாக நடைபெற உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு பல்வேறு தொழிற்பயிற்சிகளுக்கான பயிற்சியாளர்கள் தேர்வு முகாம் ஒன்றியங்கள் வாரியாக நடைபெற உள்ளது.
இதுகுறித்து  மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீன் தயாள் உபத்யாய கிராமின் யோஜனா திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சென்டர் பார் அன் எம்ப்ளாய்டு யூத் டெவலப்மெண்ட் டிரஸ்ட் பயிற்சி மையத்தில் ஹோட்டல் துறைக்கு பிளஸ் 2 தேர்ச்சி,விற்பனைத் துறைக்கு 10-வது தேர்ச்சி, மருத்துவத் துறைக்கு 8-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோர் தகுதியானவர்கள்.
 உணவு மற்றும் தங்குமிடத்துடன் 100 சதவீத வேலைவாய்ப்புடன் இலவச பயிற்சி, இலவச சீருடை மற்றும் பயிற்சி உபகரணங்கள் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 83001-51617, 94440-94325, 04328-225362.
எலக்ட்ரீசியன் பயிற்சிக்கு 8 ஆம் வகுப்பு, பி.பி.ஓ நான்வாய்ஸ் பயிற்சிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி தேவை. 3 மாத பயிற்சியுடன் கணினி, ஆங்கிலம் மற்றும் ஆளுமைப் பயிற்சியும்  வழங்கப்படுகிறது. அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும். ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருநாவலூர், விழுப்பும் என்னும் முகவரியில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 94440-59986, 94433-234396, 94440-94325, 04328-225362.
5-ஆம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, சென்னையில் உள்ள அப்டேட்டர் சர்வீஸ் எனும் நிறுவனத்தின் மூலம் கிடங்கு தேர்வு மற்றும் கிடங்கு மேற்பார்வையாளர், புட் மற்றும் பிவரேஜஸ், ஸ்டூவர்ட், ஹவுஸ்கீப்பிங் அட்டென்டன்ட் மற்றும் பிபிஓ நான்வாய்ஸ் ஆகிய பயிற்சிகள் 6 மாத காலம் உண்டு உறைவிடப் பயிற்சியாக அளிக்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்படுவோருக்கு உணவு, தங்குமிடம், சீருடை மற்றும் பயிற்சி உபகரணங்கள் இலவசம். 
18- 35 வயதுள்ளவர்களாவும், 5-ஆம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 படித்தவர்களாகவும் இருக்க வேண்டும். இத் தகுதிகளுடையவர்கள் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல், நகல்கள் மற்றும் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 97907-47223, 99406-88409, 94440-94325, 04328-225362. 
டிவிஎஸ் லாஜிஸ்டிக் பயிற்சி மையத்தில், முன்தூக்கி இயக்குபவர், கிடங்கு மேலாளர் மற்றும் பல்வேறு பயிற்சி நிறுவனங்களிலும் பிபிஓ, உணவு, விற்பனையாளர் பயிற்சிகள், உணவு மற்றும் தங்குமிடத்துடன் இலவசமாக அளிக்கப்பட  உள்ளது. 
பயிற்சி நிறைவில், சம்பந்தப்பட்ட பயிற்சி நிறுவனத்தால் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் ஊதியத்தில் பணியமர்த்தப்படுவர். 10 ஆம் வகுப்பு படித்த 18 முதல் 28 வயதுக்குள்பட்ட இருபாலரும் பயிற்சியில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 94440-94325, 04328- 225362 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com