பெரம்பலூர்

"மாட்டுவண்டிகளுக்கு தனி மணல் குவாரி  வேண்டும்'

DIN

மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு தனி மணல் குவாரிகள் அமைக்க வேண்டுமென, தொழிலாளர்கள் சங்க பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க இணைப்பு, மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கக் கிளை திறப்பு மற்றும் பெரம்பலூர் மாவட்டக் குழு சிறப்பு பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், நன்னை கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தலைமைக் குழு உறுப்பினர் ஆர். கந்தசாமி தலைமை வகித்தார். தொழிலாளர்கள் சங்க  தலைமைக் குழு உறுப்பினர்கள் டி. செல்வம், ஜி. சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
முன்னாள் எம்எல்ஏவும், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவருமான எ. லாசர் கோரிக்கைகளை விளக்கினார். 
கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் முதல் கடலூர் மாவட்டம் வரை வெள்ளாற்றில் மணல் எடுக்க மாட்டு வண்டிகளுக்கென தனியாக மணல் குவாரி அமைத்திட வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் உள்ளதுபோல, பெரம்பலூர் மாவட்டத்திலும் பசுமை வீடுகள் பி.எம்.எ.ஒய்.ஜி திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு மாட்டுவண்டிகள் மூலம் மணல் எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உத்தரவிட வேண்டும். மாடுகள், வண்டிகள் வாங்க மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்க வேண்டும்.
மாட்டுவண்டி தொழிலாளர்களை கணக்கெடுப்பு நடத்தி, அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கிட வேண்டும். தமிழகத்தின் பாரம்பரியமான மாட்டுவண்டி தொழிலைப் பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
முன்னதாக, நன்னை கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக மாட்டுவண்டி தொழிலாளர்களின் கோரிக்கை விளக்கப் பேரணி நடைபெற்றது. 
பேரவைக் கூட்டத்தில், மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் எ. கலையரசி, சிபிஎம் வட்டச் செயலர் எஸ்.பி.டி. ராஜாங்கம் ஆகியோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொழிலாளர்கள் சங்க உறுப்பினர் எ. ரவி வரவேற்றார். பொறுப்பாளர் பாண்டுரெங்கன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT