பெரம்பலூர்

கட்சிப் பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

DIN

மக்களவைத் பொதுத்தேர்தல் 2019-க்கு வாக்குச் சாவடி அமைப்பது குறித்து அரசியல் கட்சிப் பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமை வகித்தார். 
கூட்டத்தில், நடைபெறவுள்ள மக்களவை பொதுத்தேர்தல் 2019-ஐ முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்துக்குள்பட்ட பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் புதிய வாக்குச்சாவடி மையங்கள் அமைத்தல் மற்றும் பழுதடைந்த கட்டடங்கள் மாற்றம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இதில், பெரம்பலூர் (தனி) சட்டப் பேரவை தொகுதியில் 13 வாக்குச்சாவடி மையங்களின் கட்டடங்களை மாற்றியமைக்கவும், 29 வாக்குச்சாவடி மையங்களின் பெயர்களை மாற்றம் செய்யவும், குன்னம் சட்டப்பேரவை தொகுதியில் 14 வாக்குச்சாவடி மையங்களின் கட்டடங்களை மாற்றியமைக்கவும், 14 வாக்குச்சாவடி மையங்களின் பெயர்களை மாற்றம் செய்யவும் உத்தேசிக்கப்பட்டது. 
மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் சரிபார்ப்பு சிறப்பு முகாம், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பிப். 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் வாக்காளர்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில், வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் மற்றும் விவரங்கள் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என சரிபார்த்துக் கொள்ளலாம் என ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, வருவாய்க் கோட்டாட்சியர் விஸ்வநாதன், வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT