பெரம்பலூர்

மாநில ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் தொடக்கம்

DIN


பெரம்பலூரில், மாநில அளவிலான 3-வது ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கியது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான 200 மீட்டர் ஓடுதளம்கொண்ட ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தில் ஆண்டுதோறும் மாநில, மண்டல, மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடத்தப்படுகின்றன.  
அதன்படி, பெரம்பலூர் ரோலர் ஸ்கேட்டிங் அசோசிஷேசன் சார்பில் 3 ஆம் ஆண்டு மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகிறது. தொடக்க விழாவுக்கு, ரோலர் ஸ்கேட்டிங் அசோசிஷேயன் மாநில செயலர் ராமநாதன் தலைமை வகித்தார். 
முன்னாள் மாநில செயலர் சொக்கலிங்கம், ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. வரதராஜன், பெரம்பலூர் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அன்புதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, போட்டிகளை தொடக்கி வைத்த பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன் பேசியது: 
தமிழகத்திலேயே சர்வதேச தரத்திலான 200 மீட்டர் ஓடுதளம் கொண்ட ரோலர் ஸ்கேட்டிங் மைதானம் பெரம்பலூரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் ரூ. 70 லட்சத்தில் சர்வதேச தரத்தில் சிந்தடிக் மைதானமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இப் பணிகள் விரைவில் தொடங்கும். பணிகள் நிறைவடைந்ததும், அகில இந்திய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் பெரம்பலூரில் நடைபெறும் என்றார் அவர். 
தொடர்ந்து  6 வயது முதல் 8 வயதுடையோருக்கு நடத்தப்பட்ட 200 மீ, 300 மீ போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300 பேர் பங்கேற்றனர். 
8 வயது முதல் 16 வயது மற்றும் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கான 400 மீ, 600 மீ, 800 மீ ஆகிய பிரிவுகளின் கீழ்  ஞாயிற்றுக்கிழமை போட்டிகள் நடைபெறுகிறது. இப் போட்டியில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500 வீரர், வீராங்கனைகள் தங்களது பெயரைப் பதிவு செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT