பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே வெள்ளாடு வளர்ப்பு இலவசப் பயிற்சி

DIN

பெரம்பலூர் அருகேயுள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஜன.  24 ஆம் தேதி நடைபெறும் வெள்ளாடு வளர்ப்பு தொடர்பான இலவச பயிற்சி முகாமில் பங்கேற்க கால்நடை வளர்ப்போருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்- செங்குணம் பிரிவுசாலை எதிரே அமைந்துள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், வெள்ளாடு வளர்ப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது.  
இதில், வெள்ளாடு வளர்ப்பு இனங்கள், இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.  இப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை நேரில் அல்லது 93853-07022 எனும் எண்ணில் தொடர்புகொண்டு, தங்களது பெயரைப் பதிவுசெய்து பயன் பெறலாம் என, அந்த மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT