அறுந்து கிடக்கும் மின் வயர்களை மிதிக்க வேண்டாம்

விராலிமலை மற்றும் சுற்றுப்பகுதியில் அறுந்து கிடக்கும் மின் வயர்கள் அருகே செல்லாமல் மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வட்டார


விராலிமலை மற்றும் சுற்றுப்பகுதியில் அறுந்து கிடக்கும் மின் வயர்கள் அருகே செல்லாமல் மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விராலிமலை வட்டார வளர்ச்சி மற்றும் தனி அலுவலருமான நாகராஜ், சுவாமிநாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: கஜா புயலால் விராலிமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் மாற்றி, மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் அரசின் தீவிர நடவடிக்கையால் தற்போது பெருவாரியான பகுதிகளில் மின் இணைப்பு சரி செய்யப்பட்டு சீரான மின் விநியோகம் அளிக்கப்பட்டுவருகிறது. ஒரு சில உள்ளடங்கிய பகுதிகளில் மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சூழ்நிலையில் வீடு மற்றும் தோட்டத்து பகுதிகளில் ஏதேனும் மின் ஒயர்கள் அறுந்துகிடந்தால் பொதுமக்கள் யாரும் வயர்களை தொடவோ அருகில் செல்லவோ கூடாது. மேலும் இதுகுறித்து ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com