சலங்கை பூஜையில் பங்கேற்றோருக்குப் பரிசு

புதுக்கோட்டை கலை பண்பாட்டுத் துறையும் சவகர் சிறுவர் மன்றமும் இணைந்து நடத்திய குழந்தைகள் தின ஓவியப் போட்டியில் வென்றவர்களுக்கும், சலங்கைப்பூஜையில் பங்கேற்றோருக்கும் வியாழக்கிழமை


புதுக்கோட்டை கலை பண்பாட்டுத் துறையும் சவகர் சிறுவர் மன்றமும் இணைந்து நடத்திய குழந்தைகள் தின ஓவியப் போட்டியில் வென்றவர்களுக்கும், சலங்கைப்பூஜையில் பங்கேற்றோருக்கும் வியாழக்கிழமை மாலை பரிசுகள் வழங்கப்பட்டன. குழந்தைகள் தின விழா ஓவியப்போட்டி 5 முதல் 8 வயது வரை ஒரு பிரிவாகவும், 9 முதல் 12 வயது வரை ஒரு பிரிவாகவும், 13 முதல் 16 வயது வரை ஒரு பிரிவாகவும் நடத்தப்பட்டது.
இம்மூன்று பிரிவுகளிலும் வெற்றி பெற்றோர் விவரம்:
முதல் பரிசுகள்: குருமூர்த்தி, இந்துமதி, ஹரீஸ்.இரண்டாம் பரிசுகள்: கனிஷ்கா, முத்து, அருண்குமார்.மூன்றாம் பரிசுகள்: புகழேந்திரன், கெளதம், பரத் விக்ரம்.
மாலை நடன வகுப்பில் பயிற்சி பெறும் 15 மாணவ, மாணவிகளுக்கு சலங்கை பூஜை திருகோகர்ணம் ஸ்ரீ பிரகதாம்பாள் கோயிலில் நடைபெற்றது. இதில் 15 பேர் சலங்கை அணிந்து நடனமாடினர். அவர்களுக்கு சவகர் சிறுவர் மன்ற குரலிசை ஆசிரியர் கோ.சரவணன் பாட்டு பாடினார்.
நடன ஆசிரியை ச. ரூபினி நட்டுவாங்காம் செய்தார். அதனைத் தொடந்து குழந்தைகள் நல மருத்துவர் ராம்தாஸ் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஓவிய ஆசிரியர் சி.ராகவேந்திரன் வரவேற்றார்.
சலங்கை பூஜையில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு முன்னாள் நகர்மன்றத் தலைவர் கார்த்திக் தொண்டைமான் நினைவுப்பரிசு வழங்கினார்.
ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் தி.பக்கிரிசாமி பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினார். புதுக்கோட்டை திருக்கோயில்கள் உதவி ஆணையர் ம.ரமேஷ், செயல் அலுவலர் சா.இராமராஜன், ஆலய மேற்பார்வையாளர் ரெ.மாரிமுத்து, அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோ.மா.சிவஞானவதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கராத்தே மற்றும் சிலம்ப ஆசிரியர் மு.பாலசுப்ரமணியன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். திட்ட அலுவலர் பா.சாந்தி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com