வேகக் கட்டுப்பாடு கருவிகளைப் பொருத்தி  லாரிகளை இயக்க வேண்டும்

புதுக்கோட்டை அருகே வாகவாசல் அரசு உயர்நிலைப்பள்ளி சாரணர் இயக்க மாணவ, மாணவியர் சனிக்கிழமை டெங்கு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை அருகே வாகவாசல் அரசு உயர்நிலைப்பள்ளி சாரணர் இயக்க மாணவ, மாணவியர் சனிக்கிழமை டெங்கு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தலின் பேரில்  நடைபெற்ற விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சியில் பள்ளியின் 64 சாரணர் இயக்க மாணவ, மாணவியர் வாகவாசல் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் டெங்கு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். வீடு வீடாகச் சென்று வீட்டின் சுற்றுப்புறங்கள், மாட்டுத் தொழுவங்கள், கழிவுநீர் செல்லும் பாதைகள் ஆகியவற்றை தூய்மையாக பராமரிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். மேலும்  குப்பைகளை அகற்றியும், கழிவுநீர் குட்டைகளில் பிளீச்சிங் பவுடர் தெளித்தனர்.
தொடர்ந்து, நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு கூட்டத்திற்கு பள்ளித் தலைமையாசிரியர் மலர்விழி தலைமை வகித்தார். சாரண ஆசிரியர் சந்திரசேகரன் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார். 
முடிவில் ஆசிரியர் குமரன் நன்றி கூறினார்.
கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டையில் டெங்கு நோய் தடுப்பு மருந்துகள் அடிக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. 
புதுநகர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கந்தர்வகோட்டை அரசுப் பேருந்து பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள அரசுப் பேருந்துகளில் உள்புறம், வெளிப்புறங்கள்  மற்றும் பேருந்து நிலையம் வந்து சென்ற அனைத்து பேருந்துக்களுக்கும் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கை தெளிப்பான் மூலம் லைசால் மருந்து அடிக்கப்பட்டது. பணிகளை வட்டார சுகாதார ஆய்வாளர் பூமிநாதன் ஆய்வு செய்தார். சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் மருந்தடிக்கும் பணிகளை கண்காணித்து ஆலோசனை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com